மகாத்மா காந்தி வரலாறு கட்டுரை | MAHATMA GANDHI KATTURAI IN TAMIL
மகாத்மா காந்தி வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம்..
காந்தியின் முழு பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இவர் அக்டோபர் 2ல் 1879 ஆம் ஆண்டு குஜராத்தில் போர்பந்தலில் பிறந்தார். இவர் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி. தாயார் புத்லி பாய். காந்தி 13 வயதிலேயே கஸ்தூரிபாய் என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு நான்கு ஆண்மகன்கள் பிறந்தனர் . பிறகு காந்தி 16 வயதில் அவரது தந்தை காலமானார். இவர் படிப்பில் சுமாரான மாணவராக திகழ்ந்தார்.
18 வயதில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பாரிஸ்டர்(Barrister) என்ற வழக்குரைஞர் படிப்பிற்காக இங்கிலாந்தில் படிப்பதற்கு சென்றார்.பிறகு இந்தியாவில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். அதன் பிறகு தனது அண்ணன் வீட்டில் தங்கி இருந்து ராஜ்கோட் நீதிமன்றத்தில் சிறிது காலம் உதவியாளராக இருந்தார். பணியின் போது சில முரண்பாடு காரணமாக அந்த வேலையை விட்டு நீங்கினார். பிறகு தென் ஆப்பிரிக்காவில் அவர் தகுதிக்கேற்ற வேலை இருப்பதால் 1893 ஏப்ரல் மாதம் தாதா அப்துல்லாஹ் கம்பெனியின் உதவியுடன் தென்னாப்பிரிக்காவிற்கு சென்றார்.
தென் ஆப்பிரிக்காவில் நீதிமன்றத்தில் காந்தி வழக்காற்ற செல்லும்போது அங்கு இருந்த நீதிபதி தலைப்பாகை அகற்றுமாறு கூறினார் அதனை மறுத்து காந்தி நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். பிறகு ஒருநாள் பிரிட்டோரியா(pretoria) செல்வதற்காக தொடர்வண்டியில் செல்லும்போது காந்தி ஆங்கிலேயராக(வெள்ளையர்களாக) இல்லாததால் அங்குள்ள அதிகாரி(Pietermaritzburg)யால் பெட்டியில் இருந்து காந்தி தூக்கி எறிபட்டார்.
இந்த சம்பவம் அவரை மிகவும் பாதித்தது. இதுபோன்று இந்தியர்களுக்கும், அங்குள்ள கருப்பிணித்தவர்களுக்கும் பல இன்னல்கள் இருப்பதை அறிந்தார்.
பிறகு ஒப்பந்தம் முடிந்து இந்தியா திரும்பும்போது அங்கு இந்தியர்கள் வாக்குரிமையை பறிக்கும் சட்டம் வர போவதாக செய்தித்தாளில் படித்தார் பிறகு நண்பர்கள் இடையே புரிதலை கொடுத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு சட்ட முயற்சியில் ஈடுபட்டார்.அதில் தோல்வியும் கண்டார். பிறகு மனம் தளராமல் 1896ல் நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்து அதற்கு பொறுப்பாளரானார். இதன் மூலம் அங்குள்ள இந்தியர்களை ஒன்று திரட்டி அவர்கள் உரிமைக்காக போராடினார்.
1906ல் சத்தியாகிரகம் என்ற ஒரு புதுமையான போராட்டத்தை முன் நடத்தி அதற்கு அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கும் தண்டனையை ஏற்றல் ஆகிய அம்சங்களோடு போராட்டங்களை நடத்தினார். முதலில் ஆங்கிலேயர் இவர்களை எளிதாக நினைத்தனர் அதன் பிறகு இவர்களின் போராட்டத்தின் உண்மையான, நேர்மையான வாதங்களின் நோக்கங்களை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் காந்தி உரிமைகளை மீட்டு வெற்றி கண்டார், அதன் பிறகு காந்தி இந்தியா திருப்பினார்.
காந்திஜியின் தென்னாப்பிரிக்கா நிகழ்வுகளை இந்திய மக்கள் நன்கு அறிந்திருந்தன. பிறகு இந்தியாவில் மக்கள் ஆங்கிலேயர்களால் துயரப்படுவதை அறிந்து அதை எதிர்க்க பல முக்கிய தலைவர்களுடன் இணைந்து இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தை ஆரம்பித்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தை தொடங்கினார்.1924 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரானார். தலைமை ஏற்று சில நாட்களிலேயே பல புது புது மாற்றங்களை கொண்டு வந்தார். அது இயக்கத்திற்கு வலிமை கொடுத்தது. அதன்பின் அறப்போராட்ட வழிமுறைகளை முன்னிறுத்தி சுதேசி இயக்க கொள்கைகளை வைத்து இந்தியாவில் காங்கிரசை மாபெரும் விடுதலை இயக்கமாக மாற்றினார்.
ஆங்கிலே அரசு 1930 பிப்ரவரி இல் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. அதனுடன் இந்தியர்கள் தயாரிக்கும் உப்பை பிரித்தானிய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்ற சட்டத்தை ஏற்றியது. காந்தி சட்டத்தை விளக்கிக் கொள்ளுமாறு ஆங்கிலேயரிடம் கோரிக்கை விடுத்தார் அதனை ஆங்கில அரசு ஏற்கவில்லை, பிறகு காந்தி அதனை சத்தியாகிரக முறையில் எதிர்க்க 1930 மார்ச் 2ம் நாள் தனது 78 தொண்டர்களுடன் அகமதாபாத்தில் இருந்து குஜராத்தில் உள்ள தண்டி பகுதியை நோக்கி 240 மையில்,23 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு தண்டி என்ற இடத்தை வந்தடைந்தார். பிறகு கடல் நீரை காய்ச்சி உப்பை எடுத்து பிரித்தானிய அரசுக்கு எதிராக பொதுமக்களிடம் விநியோகம் செய்தார். பிறகு இந்தியா முழுவதும் பொதுமக்கள் அனைவரையும் உப்பு தயாரித்து விநியோகம் செய்ய சொன்னார். இந்தியாவில் பல இடங்களில் உப்பு தயாரித்து விநியோகித்தனர். பின்னர் காந்தி உட்பட ஆயிரகணக்கான இந்தியர்களை சிறையில் அடைக்கப்பட்டன. பிறகு மக்கள் இடையே எதிர்ப்பு அதிகரித்தது ஆனால் வேறு வழியின்றி பிரித்தானிய அரசு சட்டத்தை வாப்போஸ் பெற்றது.இதுவே உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்பட்டது. இதுவே இந்திய தேசிய போராட்டம் சரித்திரத்தில் திருப்புமுனையாக கருதப்பட்டது.
இதுபோன்று 1942ல் வெள்ளையனே வெளியேறு பெரும் போராட்டத்தில் காந்தி தன்னை இணைத்து கொண்டார். இது போன்ற பல போராட்டங்களுக்கு பிறகு 1947 இல் ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய மக்களை சுதந்திரத்தை சுவாசிக்க செய்தார்.
மகாத்மா காந்தி டெல்லியில் உள்ள பிர்லா’ மாளிகையில் ஜனவரி 30 ,1948 ஆம் ஆண்டு“ நாதுராம் கோட்ஸேவால்” சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிறகு மகாத்மா காந்தியின் மறைந்த நாளன்று ஜனவரி 30 ஐ அவரது நினைவாக“ தியாகிகள் தினம்” என கொண்டாடப்படுகிறது.
இவர் அரசியல்வாதியாகவும் சமூக ஆர்வலராகவும், எழுத்தாளராகவும் மற்றும் இந்திய சுதந்திரத்திற்காக பல போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தினார். அதனால் இவரை இந்திய நாட்டின் தந்தை எனப் போற்றப்பட்டார்.
கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலம்பு என்று முன்மொழிந்தவர். இவர் அரசியல் மற்றும் சம சமூக முன்னேற்றத்திற்கு வன்முறை ஒரு தீர்வல்ல என்று சத்தியாகிரகம் நடத்தியவர். அதனால் இவர் என்றும் உலகுக்கு எடுத்துக்காட்டாக அகிம்சையின் சின்னமாக பார்க்கப்படுகிறார்.